Tuesday, May 18, 2010

வாழ்க்கையில் 'மூன்று'


வாழ்க்கையில் 'மூன்று'

1. மதிப்பளிக்க வேண்டிய மூன்று------- முதுமை,
மதம், சட்டம்

2. விரும்ப வேண்டிய மூன்று---------------
தூய்மை, நேர்மை, கடின உழைப்பு

3 பாராட்ட் வேண்டிய மூன்று------- அழகு,
அறிவு, குணம்

4, வளர்த்துக்கொள்ள் வேண்டிய மூன்று------- அஞ்சாமை,
உற்ச்சாகம்,திருப்தி

5. காப்பற்ற வேண்டிய மூன்று-------
செல்வாக்கு, நட்பு, பற்ற்

6. விலக்க வேண்டிய மூன்று-------
புகைபிடித்தல், மது அருந்துதல், சூதாடல்

7. கட்டுப்படுத்த வேண்டிய மூன்று------- நாக்கு,
உணர்ச்சி, இச்சை

8. கவனிக்க வேண்டிய மூன்று------- பேச்சு,
ந்டத்தை, செயல்

9. ஒழிக்க வேண்டிய மூன்று-------
சோம்பல், பொய், புறங்க்கூறல்

  Bookmark and Share

வானமே இடிந்தாலும் பயப்படாதீர்! - பாரதியார்



Bookmark and Share* இந்த உலகில் உள்ள அனைவரும் எதிர்த்து நின்றாலும் அச்சம் கொள்ளக்கூடாது.
தலையில் வானமே இடிந்து வந்து விழுந்தாலும் பயம் இருக்கக்கூடாது.
* பயம் என்னும் பேயினை அடித்துவிரட்டுங்கள். பொய் என்னும் பாம்பைக்
கொல்லுங்கள். மறைந்து வந்து தாக்கும் எமனும் நடுங்கும்படி விழிப்போடு
இருங்கள். 'உயிர்களைப் பறிக்கும் காலனே! உன்னைச் சிறு புல்போல
மதிக்கிறேன். என் கால் அருகே வந்தால் சற்றே மிதிப்பேன்' என்று மனதுக்குள்
அடிக்கடி சொல்லுங்கள்.
* காலம் மிக முக்கியமானது. அதுபோய் விட்டால் திரும்ப வராது.சென்றதையே
எண்ணி கவலை என்னும் குழியில் குமைந்து கிடக்கவும் கூடாது. இன்று புதிதாய்
பிறந்தோம் என்ற எண்ணத்துடன், திடமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழுங்கள்.
தீமையை விரட்டியடியுங்கள்.
* பெருமையையும், மேன்மையையும் பெறுவதற்கு முதலில் உங்களை நீங்களே வெல்ல
வேண்டும். வெல்லும் திறமை இல்லாமல் உலகில் எதையும் சாதிக்க முடியாது.
ஆனால், இதற்கெல்லாம் அன்னை பராசக்தியின் துணையும் வேண்டுமென்பதால் அதை
அவளிடம் வேண்டிப் பெறுங்கள்.
-பாரதியார்

காந்திஜி





Bookmark and Share*இதயத்தூய்மையோடு வைத்துக்கொண்டு செய்யும் பிரார்த்தனைக்கே இறைவன் செவி
சாய்க்கிறான்.
* உள்ளவரோ இறந்தவரோ யாரையும் வணங்காமல் உண்மை என்று வழங்கப்படும்
கடவுளிடம் காணும் பரிபூரணத்தை மட்டும் வணங்குவது சரியான முறையாகும்.
* தவறான குணங்களை அகற்றி மனத்தைத் தூய்மை செய்வதற்குப் பிரார்த்தனையை விட
உதவிகரமான சாதனம் வேறு எதுவும் கிடையாது.
* கடவுளிடம் அசைக்க முடியாத பக்தி கொண்டு பிரார்த்தனை செய்வதும், நம்
குறைகளைச் சொல்லி முறையிடுவதும் வெறும் மூடநம்பிக்கையல்ல.
* தியாகம் செய்வது தான் சிறந்த வீரம்.
* பலரும் உடம்பின் சக்தியைத் தான் பலம் என்று நம்புகிறார்கள். ஆனால்
அசைக்கமுடியாத மனவுறுதியே முழுமையான பலமாகும்.
* பூஜையையும், பிரார்த்தனையையும் வெறும் உதட்டளவில் செய்வதால் பயனில்லை.
உள்ளத்தால் செய்யும் போது அப்பிரார்த்தனை இறைவனை சென்றடையும் வலிமை
பெறுகிறது.
- காந்திஜி

விவேகானந்தர்

விவேகானந்தர்


- தன்னை வெல்லக் கற்றுக்கொண்டவனிடமே நாகரிகத்தின்முதிர்ச்சிஇருப்பதா
    கச் சொல்லலாம். - சமயம் என்பது புலன்களையும் உணர்வுகளையும் கடந்து அப்பால் இருப்பது. புலன் மூலம் யாரும் கடவுளைக் காண முடியாது. கண்கள் மூலம்இதுவரையாரும் கடவுளைக் கண்டது இல்லை. இனிக் காணவும் இயலாது. உணர்வின்மூலமும் இறைவனை உணரமுடியாது. - பணத்தையும் அதிகாரத்தையும் சேர்த்துப் பங்கிட்டுக்கொள்ளும் கருத்துடன்இரு சாரார் இணைதல் கூடாது. பலவீனருக்கு உதவவும், அறியாமையில்மூழ்கிக்கிடக்கும் மனிதர்களுக்கு அறிவு கிட்டச் செய்யவும், இழந்தபண்டைப்பெருமையை நாடு மீண்டும் பெறவும், அவர்கள் ஒத்துழைக்கவேண்டும். - ஏழை மக்களை அரைத்து, அரைத்துக் கசக்கிப் பிழிந்தசெல்வத்தைவைத்துக்கொண்டு, பகட்டாக உடை அணிந்து, உலாவருபவர்கள் பதர்கள். பசியால் வாடும் காட்டுமிராண்டிகளைக்காட்டிலும் மோசமாக வாழ்ந்துகொண்டுஇருக்கும் கோடான கோடி ஏழைமக்களுக்கு உதவாது வாழும் இவர்களைப் பதர்என்றுதான் கூறவேண்டும். - முரட்டுத்தனமான சீர்திருத்தப் போக்கு முடிவில்சீர்திருத்தத்தையே தடைப்படுத்திவிடும். யாரையும் தீயவன் என்றுகூறலாகாது. ‘நீ நல்லவன்; இன்னும் நல்லவனாய் இரு’ என்றுசொல்லுங்கள்.” -விவேகானந்தர்  

Bookmark and Share