Tuesday, May 18, 2010

விவேகானந்தர்

விவேகானந்தர்


- தன்னை வெல்லக் கற்றுக்கொண்டவனிடமே நாகரிகத்தின்முதிர்ச்சிஇருப்பதா
    கச் சொல்லலாம். - சமயம் என்பது புலன்களையும் உணர்வுகளையும் கடந்து அப்பால் இருப்பது. புலன் மூலம் யாரும் கடவுளைக் காண முடியாது. கண்கள் மூலம்இதுவரையாரும் கடவுளைக் கண்டது இல்லை. இனிக் காணவும் இயலாது. உணர்வின்மூலமும் இறைவனை உணரமுடியாது. - பணத்தையும் அதிகாரத்தையும் சேர்த்துப் பங்கிட்டுக்கொள்ளும் கருத்துடன்இரு சாரார் இணைதல் கூடாது. பலவீனருக்கு உதவவும், அறியாமையில்மூழ்கிக்கிடக்கும் மனிதர்களுக்கு அறிவு கிட்டச் செய்யவும், இழந்தபண்டைப்பெருமையை நாடு மீண்டும் பெறவும், அவர்கள் ஒத்துழைக்கவேண்டும். - ஏழை மக்களை அரைத்து, அரைத்துக் கசக்கிப் பிழிந்தசெல்வத்தைவைத்துக்கொண்டு, பகட்டாக உடை அணிந்து, உலாவருபவர்கள் பதர்கள். பசியால் வாடும் காட்டுமிராண்டிகளைக்காட்டிலும் மோசமாக வாழ்ந்துகொண்டுஇருக்கும் கோடான கோடி ஏழைமக்களுக்கு உதவாது வாழும் இவர்களைப் பதர்என்றுதான் கூறவேண்டும். - முரட்டுத்தனமான சீர்திருத்தப் போக்கு முடிவில்சீர்திருத்தத்தையே தடைப்படுத்திவிடும். யாரையும் தீயவன் என்றுகூறலாகாது. ‘நீ நல்லவன்; இன்னும் நல்லவனாய் இரு’ என்றுசொல்லுங்கள்.” -விவேகானந்தர்  

Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.